டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் பயன்படுத்திய பவர் பேங்க் திடீரென வெடித்துத் தீப்பற்றியுள்ளது. இதனால் விமானத்தினுள் புகை மூட்டம் ஏற்பட்டு பயணிகளிடையே கடும் அச்சம் ஏற்பட்டது.
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட விமானக் குழுவினர், தீ அணைப்பானைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஐதராபாத் ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
