ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டீங்களா…? சீறிப்பாய்ந்த சொகுசு கார்…. டேஷ்கேமில் சிக்கிய காட்சிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2026

Spread the love

சாலைகளில் வாகன ஓட்டிகளின் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர் முறைகளைக் காட்டும் டேஷ்கேம் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற SUV கார் ஒன்று, போக்குவரத்து விதிகளைப் பெரிதும் மதிக்காமல் ஒரே பயணத்தில் மூன்று முறை ஆபத்தான முறையில் வாகனம் இயக்கியது கேமராவில் பதிவாகியுள்ளது.

சாலையின் இடது ஓரத்தில் இருந்து திடீரென வேகத்தைக் கூட்டாமல் நுழைவது, பிளைஓவரில் டம்ப் டிரக்கிற்குப் பின்னால் மிக நெருக்கமாகச் சென்று இடது பக்கமாக முந்த முயல்வது, டோல்கேட்டில் எங்கும்கூட இண்டிகேட்டர் காட்டாமல் வலது பக்கத்திலிருந்து திடீரென மற்றொரு வண்டியின் லேனுக்குள் வெட்டிச் செல்வது போன்ற செயல்கள் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளன.