விஜய் கட்சிக்கு பேரிழப்பு…. தவெக நிர்வாகி மைக்கேல் குணசிங் திடீர் மரணம்… கலங்கி நின்ற தொண்டர்கள்….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த மைக்கேல் குணசிங் அண்மையில் காலமானார் என்ற செய்தி அக்கட்சியினரையும் ஆதரவாளர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தாராபுரம் இடைத்தேர்தலில் கட்சியின் சார்பாகக் களப்பணியாற்றி தீவிரமாக உழைத்த அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கட்சி வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புகளும் தொண்டுகளும் என்றும் நினைவுகூரப்படும் என கோவை மாவட்ட தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது மறைவு செய்தி அறிந்த தவெகவினர் மற்றும் பகுதி மக்கள் நேரில் சென்று அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.