அப்படி என்ன வெறி…? திரும்பி வந்து மீண்டும் மீண்டும் காரை மோதி தள்ளி மஹிந்திரா தார் ஓட்டுனர்… சந்தை வீதியில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

கூட்ட நெரிசல் மிகுந்த சந்தை வீதி ஒன்றில் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே வெள்ளை நிற கார் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஒருவர் கீழே இறங்கியுள்ளார். பின்னர் கார் வேகமாக சென்று மஹிந்திரா கார் மீது மோதியது. இதனால் ஆத்திரமடைந்த மஹிந்திரா தார் வாகனத்தின் ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக அந்த வெள்ளை நிற காரின் மீது பயங்கரமாக மீண்டும் மீண்டும் மோதியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்தச் சந்தைப் பாதையில் அதிவேகமாகத் வாகனத்தை ஓட்டித் தப்பியுள்ளார். இந்த திடுக்கிடும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும், பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் செயல்பட்ட அந்த தார் ஓட்டுநர் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.