தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தான் இறுதி முடிவெடுப்பார் என்று அமைச்சர் C.T.R. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு அமைச்சரவையில் கணிசமான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அமைச்சரின் இந்த கருத்து அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும், முதலமைச்சர் விஜய் வைத்திருக்கும் இலாகாக்கள் உட்பட பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
