“அசிங்கமா பேசுறாரு…” வங்கி பிஸியாக இருந்த நேரம்… கிளை மேலாளரை எட்டி உதைத்த மேலாளர்…. மயங்கி விழுந்ததால் பரபரப்பு… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நஜிபாபாத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், உதவி கிளை மேலாளரை, கிளை மேலாளர் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த மோதலில், மேலாளர் சுதிர் குமார் எட்டி உதைத்ததில் உதவி மேலாளர் கௌரவ் சிங் கீழே விழுந்து மயக்கமடைந்தார். இந்த அதிர்ச்சி காட்சிகள் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தன் மீது வந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விடுமுறையில் இருந்த கௌரவ் சிங்கை வங்கிக்கு வரவழைத்த மேலாளர் சுதிர் குமார், அவரை அசிங்கமாகப் பேசி, சாதிய ரீதியான வார்த்தைகளால் வசைபாடி கொலை மிரட்டல் விடுத்ததுடன் உடலளவில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கௌரவ் சிங் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து நஜிபாபாத் வட்டார போலிஸ் அதிகாரி தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.