தயவுசெஞ்சு அந்தப் போராட்டத்துக்கு போகாதீங்க… தொழுகைக்கு வந்த மக்களிடம்… மசூதிக்கு சென்று கைகூப்பி நின்ற போலீஸ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… டெல்லியில் பரபரப்பு…!

By Swetha on ஐப்பசி 10, 2026

Spread the love

டெல்லி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜிகேபி அமைப்பின் போராட்டத்திற்கு எதிராக பழைய டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் காவல்துறை அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் காணொளியில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டம்-ஒழுங்கைப் பேணும்படியும் அந்த அதிகாரி மசூதியில் தொழுகைக்கு வந்த மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, யாரும் தேவையற்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவர் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டார். மேலும், எந்தவிதமான ஆத்திரமூட்டும் செய்திகளுக்கும் ஆளாகாமல் பொறுப்புள்ள குடிமக்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

   

இதற்கிடையில், அக்டோபர் 10 அன்று திட்டமிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள டெல்லி காவல்துறை முழு வீச்சில் தயாராகியுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் குறிப்பிட்ட பகுதிகளில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.