ஐயோ… ரயிலில் மாணவிக்கு நடந்த கொடூரம்… ஆந்திராவில் சடலமாக மீட்பு… திடுக்கிடும் பின்னணி?… ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 9, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசத்தில் ரயிலில் பயணித்தபோது மாயமான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ போரோ, ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுகாத்தியில் உள்ள பி.போரூவா கல்லூரியில் படித்து வந்த இவர், நடனக் குழுவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 30-ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தார். பின்னர், ‘கன்னியாகுமரி – திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் கவுகாத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினருடனான அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்.

பயணத்தின்போது நள்ளிரவு 12.39 மணியளவில் தனது தோழியிடம் தொலைபேசியில் பேசிய ஹிமாஸ்ரீ, ரயிலில் சிலர் தம்மிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், கேலி செய்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சோதனையின் போது, ரயிலின் S2 பெட்டியிலிருந்து அவரது லக்கேஜ் கைப்பற்றப்பட்டதுடன், சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

   

தற்போது ஆந்திரப் பிரதேச ரயில்வே தண்டவாளம் அருகே அவரது உடலை ரயில்வே காவல்துறை மீட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் மற்றும் பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அகில போடோ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தீபன் போரோ உள்ளிட்டோர், இந்தச் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி ஹிமாஸ்ரீயின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்