“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு மற்றும் காதல் ஏமாற்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விளக்கிய முத்துக்குமரன், “வஹிதா எனது தோழிதான், அவர் ஏன் இப்படி செய்தார் என விளக்கம் கேட்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முத்துக்குமரன் முன்னதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிய மேடை வீடியோவைப் பகிர்ந்து, அவர் ‘திமுக ஆதரவாளர்’ என தவெகவினர் பேசத் தொடங்கினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றபோது அவரைப் பாராட்டி முத்துக்குமரன் பேசிய வீடியோவை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். இந்த சர்ச்சைக்குரிய வஹிதா விவகாரத்திற்கு மத்தியில், முத்துக்குமரன் திமுகவா அல்லது தவெகவா என இரு கட்சி ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் மாறி மாறிச் சண்டையிட்டு லேபிள்களை ஒட்டி வருகின்றனர்.