தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா – தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி ஒன்று அடுத்தடுத்து இரு வாகனங்கள் மீது மோதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, முதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற வேன் மீது பலமாக மோதியதில், வாகனத்தில் இருந்த இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தை ஏற்படுத்திய பிறகும் நிற்காமல் சீறிப்பாய்ந்த அதே லாரி, சிறிது தூரத்திலேயே எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநரைப் பிடிக்க வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
