தலை இல்லையா?… உண்மையில் நடந்தது இதுதானா?… காட்டுப் பகுதியில் கிடந்த இளம் பெண் சடலம்… விபத்தில் உயிரிழந்த காதலன்… தீவிர விசாரணை போலீஸ்…!!

By Gayathri on ஐப்பசி 8, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடலிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் மண்டை ஓடு தனியாகக் கிடந்ததை மீட்ட காவல்துறையினர், இக்கொலையை அப்பெண்ணின் காதலனே செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கின்றனர். கடந்த செப்டம்பர் 30 அன்று அரங்கேறிய இக்கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், கொலையை நிகழ்த்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞர், சில மணிநேரங்களிலேயே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், கொலைக்கான பின்னணி மற்றும் விபத்து தொடர்பான விவரங்களை முழுமையாக ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.