“அவன் கூட பேசுவியா…?” பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை…. கண்டிக்காமல் வீடியோ எடுத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

குஜராத் மாநிலம் கட்ச் கிழக்கு எல்லைக்குட்பட்ட அஞ்சார் அருகே, 14 வயதான தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் அதைத் தனது கைபேசியில் வீடியோ எடுத்த தாய் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக அஞ்சார் பகுதியில் கூலித் தொழில் செய்து வசித்து வருகின்றனர்.

சிறுமி ஒரு சிறுவனிடம் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, சிறுமியின் கைபேசியை உடைத்து அவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தை தாய் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி, அவசர உதவி எண் 112-க்குத் தொடர்புகொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டுப் பெற்றோர் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.