இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அதில், குறுகிய வீதிகள், குப்பைக் கூளங்கள், சுவர்களில் ஒட்டப்பட்ட விளம்பரங்கள் மற்றும் சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் காட்டி, “மக்களைத் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளும் இந்தியத் தெருக்களைப் போலவே இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DeE_RJ2v3nH/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==
அத்துடன், “அனைத்து நாடுகளிலுமே இதுபோன்ற பகுதிகள் இருக்கும்போது, சமூக வலைதளங்களில் இந்தியாவை மட்டும் அசுத்தமான நாடு என்று சித்தரிப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், சிலர் “சீனாவில் இது அரிதான விதிவிலக்கு, ஆனால் இந்தியாவில் பெரும்பான்மையான இடங்கள் இப்படித்தானே இருக்கின்றன” என்று மாறுபட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
