“ஒரு வாய் குடிச்சு பாருப்பா…” முகர்ந்து பார்த்து யோசித்த பிரியங்கா…. செல்லமாக வற்புறுத்திய ராகுல்… போராட்ட களத்தில் எடுத்த வீடியோ வைரல்….!!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் தில்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின்னர் ஆகாசவாணி பவன் அருகே இருவரும் அமர்ந்து மதிய உணவு அருந்தியபோது, ராகுல் காந்தி தான் வைத்திருந்த சிகப்பு நிற எனர்ஜி பானத்தை பிரியங்காவுக்குக் குடிக்கக் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் அதன் வாசனை பார்த்துவிட்டுப் பிரியங்கா தயங்கிய நிலையில், ராகுல் வற்புறுத்தியதை அடுத்து அவர் அதை ஒரு மடக்கு குடித்தார். ‘ஸ்டிங்’ எனர்ஜி பானம் போன்ற தோற்றத்தில் இருந்த அந்த பானத்தைக் குறித்த விவாதங்களும், தீவிர அரசியல் போராட்டத்திற்கு இடையே ராகுல் – பிரியங்கா சகோதரர்களின் இந்த இயல்பான, கலகலப்பான பிணைப்பு தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.