அய்யய்யோ… என்ன கொடுமை இது?… விளையாடிய 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடித்த காப்பாளர்… மகாராஷ்டிராவில் அரங்கேறிய கொடூரம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிமூர் தாலுகாவில் உள்ள ஜாம்புல்காட் அரசுப் பழங்குடியினர் ஆசிரமப் பள்ளியில் சுமார் 82 மாணவர்களுக்குத் தண்டனையாகப் பாதி மொட்டை அடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று பள்ளி சார்பில் மாணவர்களுக்கு முடி திருத்தும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது, சில மாணவர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருந்தவேளையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி கண்காணிப்பாளர் பிரசாந்த் மேஷ்ராம், முடி திருத்துபவரை அழைத்து மாணவர்களின் தலையில் பாதியை மட்டும் வெட்டி அரைகுறையாக மொட்டை அடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அரைகுறை முடியுடன் இருந்த மாணவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஷயம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, உடனடியாக மாணவர்களின் முடியைச் சீராக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்த சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிறு அதிகாலை 4 மணி வரை தூங்கச் சென்ற மாணவர்களை எழுப்பி, மீண்டும் முழுமையாக முடி திருத்தம் செய்யப்பட்டது.

   

மாணவர்களின் நலன் கருதியும், சுகாதாரப் பராமரிப்பிற்காகவுமே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கண்காணிப்பாளர் நியாயப்படுத்திய போதிலும், பள்ளி முதல்வர் பிரசாந்த் கிரி அவருக்குக் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும், வெறும் விளக்கம் கேட்கும் நோட்டீஸோடு இந்த விவகாரத்தை முடித்துவிடக் கூடாது என்றும், இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பு பெற்றோர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.