ட்ராக்டர் பின்புறத்தில் மோதிய பைக்…! துடிதுடித்து இறந்த 2 வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் ஹுஸ்னாபாத் பகுதிக்குட்பட்ட ஹனும கொண்டா சாலையில், கல்யாணமஸ்து ஷாப்பிங் மால் அருகே நேரிட்ட கொடூர சாலை விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹுஸ்னாபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், நரசிம்மா மற்றும் மற்றொரு இளைஞர் ஆகிய 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த நகராட்சி குப்பை சேகரிக்கும் டிராக்டரின் பின்புறத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சி விபத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நரசிம்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

   

உடனுடன் பயணித்த மற்றொரு இளைஞர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹுஸ்னாபாத் காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.