“எனக்கு சாவை கண்டு பயமில்லை”…. நடுவானில் இந்திய பைலட்டை குத்திய ஓமன் துணை பைலட்டின் பகீர் வாக்குமூலம்…. வெளியான திடுக்கிடும் உண்மை….!

By Nanthini on ஐப்பசி 5, 2026

Spread the love

துபாய் – டெல்அவிவ் இடையிலான ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தை கடத்தி விபத்தில் சிக்க வைக்க முயன்ற ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டு, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். தாக்குதலின் போது இந்திய தலைமை விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய அவர், “எனக்கு சாவை கண்டு பயமில்லை; விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதே எனது ஒரே நோக்கம்” என அதிகாரிகளிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சதியை சக ஊழியர்களும் பயணிகளும் இணைந்து முறியடித்ததால், விமானத்தில் இருந்த 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. அமீரகத்தில் பிறந்த ஹமாமி, தனது இளமைக்காலத்தில் கணிசமான பகுதியை தாய்நாடான சிரியாவில் கழித்துள்ளார். அங்குதான் அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

   

இதனிடையே, ஹமாமிக்கு ஆஸ்திரேலியாவுடன் இருந்த பழைய தொடர்பும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் கடந்த 2014-இல் ஆஸ்திரேலிய மாணவர் விசா பெற்று, 2015 முதல் 2017 வரை அங்கு தங்கிப் பயின்றுள்ளார். பின்னர் படிப்பைத் தொடராததால் 2019-இல் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த அந்த காலகட்டத்திலேயே பயங்கரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையும் பாதுகாப்பு முகமைகளும் தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளன.

   

தற்போது பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து, ஹமாமிக்கு பின்னணியில் செயல்பட்ட சர்வதேச பயங்கரவாத நெட்வொர்க் எது என்பதை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. தொழப்போவதாகக் கூறி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட அவரது பின்னணி, விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.