தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பத் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட 10 வட்டாரங்களில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் 3 மாத கணினி சான்றிதழ் படிப்பு அல்லது B.Sc (CS) / BCA படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகன உரிமம் மற்றும் மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 01.07.2026 அன்றைய நிலவரப்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.12,000 மற்றும் பயணப்படியாக ரூ.750 சேர்த்து மொத்தம் ரூ.12,750 வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, வரும் 16.10.2026 அன்று மாலை 5:45 மணிக்குள் “இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
