மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (SIR/EVM) முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கார்கே தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, SIR நடைமுறைக்கு பிறகான தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து முதலமைச்சர்களும் முறைகேடானவர்கள் எனப் பேசியிருப்பது, கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர் வேட்பாளரான விஜய்யையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே SIR நடைமுறை நிறைவடைந்த மாநிலங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கார்கேயின் இந்த சர்ச்சை பேச்சு தவெக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
