“வேலுமணி, சி.வி.சண்முகம் வைக்கும் செக்…?” எடப்பாடிக்கு அக்னி பரீட்சை…! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலால் அதிமுகவில் கிளம்பும் பெரும் புயல்…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும் தீர்மானிக்கும் மிக முக்கிய அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளதாகக் கட்சியினரே கூறி வருகின்றனர்.

இடைத்தேர்தல் வெற்றிக்காக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் கள அனுபவம் மிக்கத் தீவிர நிர்வாகிகளைத் தாராபுரம் தொகுதிக்குள் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் களமிறக்கியுள்ளார். அதேசமயம், இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தால், கட்சிக்குள் எடப்பாடிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலகக் கொடி உயர்த்துவார்களோ என்ற பெரும் அச்சமும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

   

தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவுக்கு, இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியே கட்சியின் எதிர்கால இருப்புக்கு மிகவும் அவசியம் என்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது முழு பலத்தையும் பிரயோகித்து தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.