பட்டப்பகலில் துணிகரம்…! துப்பாக்கி முனையில் தங்க, வெள்ளி நகைகள் கொள்ளை… ஊழியரை பைக்கில் இழுத்து சென்ற கொடூரம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் வனடோங்க்ரி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில், பைக் ஆசாமிகள் சிலர் துப்பாக்கி முனையில் புகுந்து தங்க மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடைக்கு பைக் மூலம் வந்த மர்ம நபர்கள், கடையின் ஊழியரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்த விலையுயர்ந்த தங்க, வெள்ளி நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, தைரியமாக அவர்களைத் தடுக்க முயன்ற கடை ஊழியரை, கொள்ளையர்கள் தங்களது பைக்கில் இழுத்துச் சென்றதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நாக்பூர் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, தப்பியோடிய பைக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் அரங்கேறிய இக்க கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.