டேய்… என் மகளையே தொடுவியாடா?… மாற்றுத்திறனாளி மகளுக்காகச் சிறுவனை வெளுத்து வாங்கிய தந்தை… சூரத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

சூரத்தின் அல்டான் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும், ஒரு நநபரின் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது.

தன்னுடைய மகளுக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த நபர், சம்பந்தப்பட்ட சிறுவனை நேரில் சென்று தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சிறுவனைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரின் கவனத்தைப் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

   

https://twitter.com/nextminutenews7/status/2106685393794224256/video/1

   

இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இரு சிறுவர்களின் குடும்பத்தினரும் ஒன்று கூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தங்களுக்குள் பேசி, பரஸ்பரம் சமரச முடிவுக்கு வந்து பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.