பெண் மருத்துவரை அறைந்த நோயாளி…. ஸ்டெதாஸ்கோப்பைப் பறித்து, கம்ப்யூட்டரை உடைத்து ரகளை…. ஹாஸ்பிடலில் வைத்தே கொடூர தாக்குதல்…. பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பூதான் போச்சம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுவேதா என்ற பெண் மருத்துவரை அறைந்து, மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கிய நபர் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துடியாலா வெங்கட திருப்பதி எனும் நபர், தனது காலில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெற்ற பிறகு, திடீரென மருத்துவரின் அறைக்குள் புகுந்து மேஜையில் அமர்ந்திருந்த பெண் மருத்துவர் சுவேதாவின் முகத்தில் இரண்டு முறை பலமாக அறைந்துள்ளார். தடுக்க வந்த சக ஊழியர்களையும் தாக்கிய அவர், மேஜையில் இருந்த ஸ்டெதாஸ்கோப்பைப் பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த கணினியையும் அடித்து நொறுக்கிவிட்டு வெளியேறியுள்ளார். இந்த அராஜகச் செயல்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

   

தாக்குதல் நடத்திய நபர் தானே நேராக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். இச்சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில், போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை இழுத்துப் பிடித்துக் கைது செய்தனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு கோரி மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து உடனடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.