“திமுகவும் நாங்களும் ஒன்னுதான்”…. திடீரென தடம் மாறிய வன்னி அரசு… கொந்தளிக்கும் அரசியல் களம்…..!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கொள்கை ரீதியாக வேறுபட்டவை அல்ல எனக் கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாஜக மற்றும் சனாதன எதிர்ப்பு, சமூக நீதி என இரு கட்சிகளின் கோட்பாடுகளும் கொள்கைகளும் ஒன்றுதான் என்றும், பல்வேறு களப்போராட்டங்களில் இரு இயக்கங்களும் கைகோர்த்து நின்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக கூட்டணிக் கருத்து வேறுபாடுகளால் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த வன்னி அரசு, தற்போது மீண்டும் திமுக ஆதரவு நிலையை எடுத்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.