திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள சிக்குபோல கவுண்டன் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 60 வயதான விவசாயி ஊமைச்சாமி என்கிற பெருமாள். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி மற்றும் ஏசி மெக்கானிக்காக பணியாற்றும் 30 வயது மகன் முத்தையா ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
முத்தையாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபகாலமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நந்தினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
