‘எனக்கே துரோகமா?’… 8 வருட காதல்… 7 வயது குழந்தை… மனைவியை கதறக்கதற வெட்டிக்கொன்ற கணவன்… போலீசை அதிரவைத்த வாக்குமூலம்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முஜைதீன். இறைச்சிக் கடை ஒன்றில் பணியாற்றி வரும் இவரும், சோபியா என்பவரும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முஜைதீன் தனது மனைவி சோபியாவை ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள்ளாகவே, முஜைதீன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சோபியா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவன் முஜைதீனை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மாங்காடு பேருந்து நிலையம் அருகே அவரை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். காவல்நிலையத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைக்கான பின்னணி குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.