திக்.. திக்..! நள்ளிரவில் கேட்ட துப்பாக்கி சத்தம்… மனைவியை சுட்டுவிட்டு கொள்ளை நாடகமாடிய கணவன்… அரங்கேற்றிய பகீர் கொடூரம்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

‘அமெரிக்கன் ஐடல்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றவரும், ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பாஸ்டருமான காலேப் ஃப்ளின் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தனது மனைவியான ஆஷ்லியை அவர் தூங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொன்றுவிட்டு, வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்து தாக்கியதாக காவல்துறையினரிடம் அவர் நாடகமாடினார். எனினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் எவ்வித அத்துமீறலும் நடக்கவில்லை என்பதும், தடயங்களை மாற்றி அமைத்து அவரே இந்தக் கொலையைச் செய்ததும் அம்பலமானது.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. காலேப் ஃப்ளின்னிற்கு வேறொரு பெண்ணுடன் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்பு இருந்ததும், அவருடன் சேர்ந்து வாழ்வதற்காகவே திட்டமிட்டு தனது மனைவியைத் தீர்த்துக்கட்டியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், குற்றத்தை மறைக்க அவர் தனது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளைப் பயன்படுத்தியதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை முழுமையான குற்றவாளி என ஜூரிகள் குழு சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.