சாத்தான்குளத்தில் இந்தி திணிப்பா?… U-Turn அடிக்கும் தவெக அரசு… மு.க.ஸ்டாலின் சரமாரி தாக்கு…!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டிப் பலகையில், ஊர் பெயர்கள் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக மாநில நெடுஞ்சாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இங்கு இந்தி இடம்பெற்றதற்குப் பொதுமக்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பினர் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத் தாண்டி தற்போது மாநில அரசே அதைச் செய்வதாகச் சாடினார். மேலும், ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

   

இந்தி எழுத்துகள் இடம்பெற்ற வழிகாட்டிப் பலகை விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய இருவரைத் துறை சார்ந்த அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.