“இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய மாணவி…” மூலை முடுக்கில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தை… தவறான பாதையில் செல்கிறதா இளம் தலைமுறை,,,? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

பள்ளிச் சீருடை அணிந்த மாணவி ஒருவர், முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து மர்ம நபர்களுடன் ரகசியமாகப் பேசும் அதிர்ச்சி தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடியபடி வந்து இறங்கும் அந்த மாணவி, அங்கிருந்த மற்றொரு பெண் மற்றும் இரு இளைஞர்களுடன் சேர்ந்து மூலை முடுக்கில் நின்று ரகசியமாகப் பேசி சதித்திட்டம் தீட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அடையாளத்தை மறைப்பதற்காகவே அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு வந்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

   

இளம் தலைமுறையினரின் இதுபோன்ற மர்மமான மற்றும் அநாகரிகமான நடத்தைகள் அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதோடு, சமூகத்தில் பெரும் பேரபாயத்தை உருவாக்கும் என்று இணையவாசிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.