திக் திக் திக்… 50 கேஸ் சிலிண்டர்கள் வைத்திருந்த… ரகசிய கிடங்கில் தொடர் வெடிப்பு… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய பயங்கரம்…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

கிழக்கு பெங்களூருவில் உள்ள காக்கதாசபுரா பகுதியில், சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு தற்காலிக சேமிப்புக் கிடங்கில் திடீரென மூன்று எல்.பி.ஜி சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் மற்றும் அருகில் உள்ள என்.சி.எஃப்.இ பள்ளி மாணவர்கள் இடையே பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த தற்காலிகக் கிடங்கில் வணிகப் பயன்பாடு, வீட்டு உபயோகம் மற்றும் சிறிய அளவிலானவை என சுமார் 50 கேஸ் சிலிண்டர்கள் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் கேஸ் ரீஃபில்லிங் செய்யப்பட்டு வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் பலமாகச் சந்தேகிக்கின்றனர்.

   

https://twitter.com/TOIBengaluru/status/2105245416224899413/video/1

   

அதிர்ஷ்டவசமாக இந்த அசம்பாவித சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிலிண்டர்கள் வெடித்த அதிர்வில் அருகில் இருந்த பள்ளியின் ஒருசில ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.