நீங்க திருடர்களா?… கடைக்கு வெளியே முதிய தம்பதியை அவமானப்படுத்திய நபர்… இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

ஆஸ்திரேலியாவில் உள்ள கேமார்ட் கடைக்கு வெளியில், முதிய தம்பதியினர் பொருளைத் திருடிவிட்டதாகக் கூறி நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெண்ட் கார்ட்டர் என்ற ஆஸ்திரேலிய நபர், கடையை விட்டு வெளியே அமர்ந்திருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதிய தம்பதியினரிடம் சென்று, அவர்கள் வைத்திருந்த பெட்டியில் பாதுகாப்புச் சாவடி டேக் அகற்றப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி, “இதைத் திருடினீங்களா? நீங்கள் திருடர்களா?” என நேரடியாகக் குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்துள்ளார்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தைக் நேரில் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், அந்த முதிய தம்பதியினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். கடையின் பணப் பதிவேட்டில் அவர்கள் அப்பொருளுக்கான பணத்தைச் சரியாகச் செலுத்தி வாங்கியதை தான் பார்த்ததாகவும், வயது முதிர்வின் காரணமாக அந்தப் பாதுகாப்பு டேக்கை கடையை விட்டு வெளியேறும் முன் அகற்ற வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது ஒரு அறியாமல் நடந்த தவறே தவிர திருட்டு அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

   

https://www.instagram.com/reel/DdntPKHxwM8/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஆதாரமில்லாமல் முதியவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட அந்த ஆஸ்திரேலிய நபருக்கு சமூக வலைதளப் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் அந்த நபரின் செயல் இனவெறி மற்றும் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி, அவருடைய கணக்கை முடக்க வேண்டும் என்றும், உண்மை தெரியாமல் யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்றும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.