ஐயோ… என்ன கொடுமை… ரேஷன் அரிசி தகராறில்… தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

ஹசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட சோம்புரா கிராமத்தில், ரேஷன் அரிசி மற்றும் நிலப் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மூத்த சகோதரனால் கத்தியால் குத்தப்பட்ட 42 வயதான ரகு என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவருடைய மூத்த சகோதரரான தேவராஜ் என்பவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணமான இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில காலமாகவே சொத்து தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ரகு தனது முதிய தாயாருடன் வசித்து வந்ததால், தாயாரின் பெயரில் உள்ள குடும்ப அட்டையின் மூலம் அரசு வழங்கும் ரேஷன் அரிசியைப் பெற்று வந்துள்ளார். இதற்கு தேவராஜ் எதிர்ப்பு தெரிவித்து, தாயார் பெயரில் வரும் ரேஷன் அரிசியில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கோரியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

   

இந்நிலையில் வியாழக்கிழமையன்று மீண்டும் ரேஷன் அரிசி தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆத்திரமடைந்த தேவராஜ், ரகுவை கத்தியால் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரகு, 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேவராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.