“மண்ணுக்குள் ஏதோ கிடக்கு!”… ஊரை ஏமாற்றி நாடகம்… காதலியை தோட்டத்தில் புதைத்த 22 வயது வாலிபர்… நள்ளிரவில் நடந்த பயங்கர கொலை…!!

By Gayathri on புரட்டாதி 29, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் மற்றும் பர்வேஷ் ஆகியோர் தங்களை தம்பதியராக அடையாளப்படுத்திக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பர்வேஷ் தன்னுடனே வாழ்ந்து வந்த கிரணை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் இந்த குற்றத்தை மறைப்பதற்காக, வீட்டின் அருகிலேயே உள்ள தோட்டத்தில் குழியைத் தோண்டி அவரது உடலை ரகசியமாக புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வீட்டின் உரிமையாளர் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது. அவர் அந்த வீட்டைப் பார்வையிட வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததோடு தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் ஒரு கை மட்டும் வெளியே தெரிவதைக் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மண்ணுக்குள் இருந்த கிரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பர்வேஷை பிடிப்பதற்காக போலீசார் தீவிர வலைவீசி தேடி வருகின்றனர்.