‘டிராமா பண்ணாதே…” காலில் விழுந்து கதறிய பணிப்பெண்…. போலிசில் ஒப்படைக்காமல் செட்டில்மென்ட் செய்து அனுப்பிய ஓனர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

வீட்டில் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வீட்டு வேலைக்காரப் பெண் ஒருவரை, எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல், ‘டிராமா பண்ணாதே’ எனக் கூறி அவர் வேலை செய்த நாட்களுக்கான நிலுவைச் சம்பளத்தைக் கொடுத்து வீட்டு உரிமையாளர் அனுப்பிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அவ்வீடியோவில், குற்றம்சாட்டப்பட்டப் பெண் உரிமையாளரின் காலில் விழுந்து கைகளைக் கூப்பித் தொடர்ந்து மன்னிப்புக் கேட்கிறார். ஆனால், எவ்வித ஆத்திரமும் அடையாத வீட்டு உரிமையாளர், அந்தப் பெண்ணிடம் எந்த நாடகமும் ஆட வேண்டாம் எனக் கூறி, அவர் பணிபுரிந்த நாட்களுக்கான கணக்கை முடித்து பணத்தைக் கொடுத்து அங்கிருந்து கிளம்புமாறு அமைதியாகக் கூறுகிறார். போலிசில் புகாரளிக்காமலும், தாக்குதலில் ஈடுபடாமலும் நிலுவைச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிய உரிமையாளரின் மனிதநேயத்தை ஒருதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

   

இருப்பினும், இச்சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து, அந்த வேலைக்காரப் பெண்ணின் முகத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் பதிவிட்டது தவறானது என மற்றொரு தரப்பினர் கடுமையாகச் சாடி வருகின்றனர். “தனியுரிமை காக்கப்பட வேண்டும்,” என்றும், “திருட்டு உண்மையெனில் போலிசில் புகார் அளித்திருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு வீடியோவை இணையத்தில் பதிவிட்டு அசிங்கப்படுத்துவது நியாயமா?” என்றும் நெட்டிசன்கள் இடையே காரசாரமான விவாதம் வெடித்துள்ளது.