“வெறும் வயிற்றில் 5 இலை சாப்பிட்டால் போதும்…” உச்சி முதல் பாதம் வரை நிகழும் பேரதிசயம்…! கறிவேப்பிலையின் ஒளிந்திருக்கும் அரிய மருத்துவ ரகசியங்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

நாம் தினமும் சமையலில் மணத்திற்காகப் பயன்படுத்திவிட்டுப் தூக்கி எறியும் கறிவேப்பிலையில், உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் ஒளிந்துள்ளன. 100 கிராம் கறிவேப்பிலையில் வைட்டமின் A, C, B, E ஆகிய ஊட்டச்சத்துக்களும், எலும்பு வலிமைக்குத் தேவையான கால்சியம், ரத்தச் சோகையைப் போக்கும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 முதல் 10 புதிய கறிவேப்பிலை இலைகளை நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து விழுங்கி வந்தால், மயிர்க்கால்கள் வலுவடைந்து முடி கொட்டுவது உடனடியாகக் குறையும்.

மேலும் இளநரை தடுத்து நிறுத்தப்படுவதோடு, இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் A மற்றும் இரும்புச்சத்து, மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலைத் தூய்மைப்படுத்த உதவுகிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அளவுக்கு அதிகமாகக் கறிவேப்பிலையை எடுத்துக்கொள்வதற்கு முன்பாகத் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.