திக் திக் நிமிடங்கள்…! கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…! துடிதுடித்து பலியான நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் அண்ணமையா மாவட்டம் பீலேரு அருகே உள்ள வேபுலபைலு – ஜங்கம்பள்ளி பகுதியில் நெஞ்சை நடுங்க வைக்கும் கோரச் சாலை விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் அதிவேகமாக வந்த காரும், எதிரே வந்த ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த கொடூர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோ மற்றும் காரில் பயணித்த பலர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினர்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.