தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள அல்வால் காவல் எல்லைக்குட்பட்ட பெத்த பெட்டி பார்மா ரெட்டி காலனியில், ரமா என்ற பெண் தனது சொந்தக் கணவரான ஸ்ரீனிவாஸைக் கோடரியால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.
கணவன் ஸ்ரீனிவாஸ், தனது சொந்த மகளிடம் தவறான எண்ணத்தோடு அத்துமீறி நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ரமா, பெற்ற மகளைக் காப்பதற்காகக் கணவனைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஸ்ரீனிவாஸ் கேட்காததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரமா, வீட்டில் இருந்த கோடரியை எடுத்துச் ஸ்ரீனிவாஸைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
கோடரி வெட்டில் பலத்த காயமடைந்த ஸ்ரீனிவாஸ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அல்வால் போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
