நெல்லூர் மாவட்டம் ஹரிநாதபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்ததால் மின்சாரம் பாய்ந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீட்டில் மின்சார மெயின் போர்டு சுவிட்ச் அணைக்கப்படாமல் இருந்ததால், தொட்டியில் இருந்து வழிந்து தரையில் பரவிய தண்ணீர் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இந்த நீரில் கால் வைத்த சகோதரிகளான ஜோதி உரைலகண்டி (11) மற்றும் அமுல்யா (7) ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது.
மின் அதிர்ச்சிக்கு உள்ளான இரு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகவும் மேல் நடவடிக்கைகளுக்காகவும் ஜிஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
