பிருந்தாவனத்தில் சாந்த் பிரேமானந்த் மகாராஜின் 25 ஆண்டு கால தீவிர பக்தரான ரசிக் துலாரி சரண் என்பவர், கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து திடீரென தலைகீழாக கீழே விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து சாலையில் விழுந்ததில், அவரது தலை பலமாகத் தரைப்பகுதியில் மோதி உடைந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் வலியால் துடிதுடிக்க, அவரது தலையில் இருந்து ரத்தம் சாலையில் வேகமாகப் பரவத் தொடங்கியது.
அதே நேரத்தில், அப்பகுதியைக் கடந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் இருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அவர்களில் ஒருவர் மஞ்சள் நிற ஆடை அணிந்த பக்தர் ஆவார். மேலும், அசம்பாவிதம் நடந்த அதே தருணத்தில் குடிநீர் விநியோக வாகனம் ஒன்றும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது.
https://twitter.com/ArunAzadchahal/status/2104132158487138320/video/1
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி காலை 10:35 மணியளவில் பக்தர் ரசிக் துலாரி சரண் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
