“கார் போனட்டில் தொங்கிய வாலிபர்…” நிறுத்‌தாமல் 2 கி.மீ தூரம் இழுத்து சென்ற கொடூரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் அருகே உள்ள சிதார்கஞ்ச் பகுதியில், இரண்டு கார்கள் ஒன்றோடொன்று பலத்த சத்தத்துடன் மோதி கொடூர விபத்துக்குள்ளாகின. விபத்து நடந்ததும், அதில் சம்பந்தப்பட்ட ஒரு காரின் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் சம்பவ இடத்திலிருந்து காரை நிறுத்‌தாமல் தப்பியோட முயன்றுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு காரின் உரிமையாளரான இளைஞர், தப்பியோடும் காரை நிறுத்த வேறு வழியின்றி ஆபத்தான முறையில் அந்த காரின் போனட் மீது ஏறி நின்று காரை மறித்துள்ளார். இருப்பினும், காரை நிறுத்த மனமில்லாத அந்த ஓட்டுநர், போனட்டில் இளைஞர் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல் காரை அதிவேகமாக இயக்கியுள்ளார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த இளைஞரைக் காரின் போனட்டிலேயே தொங்கவிட்டபடி இழுத்துச் சென்றுள்ளார்.

   

சாலையில் சென்ற பொதுமக்கள் இந்தத் திகில் காட்சியைக் கண்டு அலறியடித்து உடனடியாக 112 அவசர உதவி எண்ணிற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பாய்ந்து வந்த போலிஸார், காரை மடக்கிப் பிடித்துப் பறிமுதல் செய்ததோடு, ஆபத்தான முறையில் காரை இயக்கிய ஓட்டுநரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.