நாடு முழுவதும் இன்று வங்கிகள் இயங்கும்… என்னென்ன சேவைகள் கிடைக்கும்?…. இதோ முழு விவரம்…!

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

வங்கிகளின் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாரத்தில் 5 நாட்கள் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்களாக அமைந்தன. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் சூழல் ஏற்பட்டது.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதன்படி, செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம் போல் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் வங்கிக் கிளைகள், வங்கி அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம் சாார்ந்த சேவைகள் முழுமையான அளவில் செயல்படும். மேலும், எச்டிஎஃப்சி போன்ற சில தனியார் வங்கிகளும் ஞாயிறன்று செயல்படும் எனத் தெரிவித்துள்ள நிலையில், தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கிளைகளின் அதிகாரப்பூர்வ தகவலை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கிச் பணிகளை நேரில் சென்று முடிக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.