“வாழ்த்து பெறக்கூட வரலையா? தவெக-வின் மாஸ் கெத்து”… கடுப்பில் கொந்தளிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்… அடுத்த பிளான் என்ன….?

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையே புகைச்சல் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் கூட்டணித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தவெக வேட்பாளர்கள் இதுவரை தங்களை நேரில் வந்து சந்திக்கவே இல்லை என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தவெக தலைமை இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் தெரிகிறது.

கூட்டணித் தலைவர்களுடனான இந்த இடைவெளி ஒருபுறமிருக்க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பும் தவெக தரப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய தொடர்ச்சியான புறக்கணிப்பு நடவடிக்கைகளால், ‘பெயருக்குத்தான் கூட்டணியா?’ என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடும் விரக்தியிலும் வெறுப்பிலும் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.