கடவுளே இப்படியா ஆகணும்..? மகனுடன் தூங்கி கொண்டிருந்த தம்பதி…. வீட்டில் சுவர் இடிந்து பலியான சோகம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் வேப்பம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத்பூர் கிராமத்தில், இடைவிடாது பெய்து வந்த கனமழையால் கொடூரச் விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் மகனுடன் ஓலை மற்றும் கூரையால் ஆன ஏழை வீட்டில் நள்ளிரவில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக வீட்டின் பலவீனமான கூரை மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. ஆழமான தூக்கத்தில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன் ஆகிய மூவரும் கண் இமைக்கும் நேரத்திற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடோடி வந்த கிராம மக்கள், இடிபாடுகளைத் தீவிரமாக அகற்றி மூவரின் உடல்களையும் வெளியே எடுத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன் ஆகிய மூவரும் கனமழை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.