ஜெம் வீரமணி வழக்கு…. திமுக ஆட்சியில் நடந்தது என்ன?…. 500 கோடி பேரப் பேச்சு உண்மையா?….. அமைச்சர் வெளிப்படுத்திய பகீர்…..!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்போதைய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், அதன்பின்னணியில் நடந்த முறைகேடுகள் குறித்தும் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டிலேயே ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டும், அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்களா இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிறுமியை வன்கொடுமை செய்த ஆதாரங்கள் கிடைத்த பிறகும், உண்மைகளைக் கண்டறிய திமுக ஆட்சியில் ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பல்வேறு மட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளதாகவும், ஜெம் வீரமணியிடம் பேரம் பேசி சுமார் 500 கோடி ரூபாய் வரை பணம் பறிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் புகார்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய முறைகேடுகள் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் என்ன செய்து கொண்டிருந்தார் எனக் கேள்வி எழுப்பிய அவர், வீரமணி வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ, யார் மூலமாக ஆதாரம் அழிக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்டதோ அவர்கள் அனைவர் மீதும் தீர்க்கமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.