நீண்ட நேரம் நிற்பது, அதிக தூரம் நடப்பது, சுளுக்கு மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக கணுக்கால் வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் குளிர் காலத்தில் தீவிரமடையும் இந்த கணுக்கால் வலிக்கு, பெரும்பாலான மக்கள் தற்காலிக நிவாரணியாக வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால், இதற்கு நிரந்தர தீர்வாகச் சமையலறையில் உள்ள 5 இயற்கை உணவுகள் உதவும் எனச் சென்னை எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கணுக்கால் வலியிலிருந்து விரைந்து நிவாரணம் பெற இஞ்சி மற்றும் மஞ்சளைத் தேன் அல்லது பாலுடன் கலந்து உட்கொள்ளலாம். மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்புகளை வலுப்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் பாதங்களைச் சிறிது நேரம் ஊறவைப்பது உடனடியாக வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் தரும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
