யார் கெத்து? ரூ.197 கோடி Vs ரூ.116 கோடி…. அம்பலமான உண்மை…. தேர்தல் செலவு கணக்கில் சிக்கிய முன்னணி கட்சிகள்…. விஜய் செய்த ட்விஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மேற்கண்ட கணக்கு வழக்குகளையும் பிரசார செலவுகளையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கையின்படி திமுக தேர்தல் பிரசாரத்திற்காக மொத்தம் ரூ.197 கோடி செலவிட்டுப் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அதிமுக ரூ.116 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள விரிவான அறிக்கையின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கட்சிச் சின்னத்தில் களமிறங்கிய வேட்பாளர்களுக்கு நேரடியாக ரூ.47.95 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வியூகங்களை வகுத்துத் தந்த ‘பென்’ (PEN) நிறுவனத்திற்கு ரூ.65.28 கோடியும், எஞ்சிய தொகை பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்திற்காகவும் செலவிடப்பட்டுள்ளது. இந்தச் செலவினங்களுக்குப் பிறகும், திமுக தனது வங்கிக் கணக்கில் ரூ.319.39 கோடி இருப்பு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

   

அதேவேளையில், அதிமுக தனது பொதுத் தேர்தல் செலவினங்களுக்காக ரூ.109 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் ‘பிரமாண்யா ஸ்ரேட்டஜி கன்சல்டிங்’ என்ற தேர்தல் வியூக நிறுவனத்திற்கு மட்டும் ரூ.103.98 கோடி வழங்கப்பட்டு, சமூக வலைதளப் பிரச்சாரம் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் செலவிற்காக ரூ.2.78 கோடியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்கு ரூ.4.11 கோடியும் செலவிடப்பட்ட நிலையில், அதிமுகவின் வங்கிக் கணக்கில் ரூ.295.98 கோடி இருப்பு உள்ளது.

   

தேசிய மற்றும் இதர கட்சிகளின் செலவினங்களைப் பொறுத்தவரை, பாஜக மொத்தம் ரூ.51.56 கோடி செலவிட்டு காங்கிரஸை விட அதிக தொகையைச் செலவழித்துள்ளது; இதில் தமிழக பாஜக ரூ.31.57 கோடியும், தேசிய தலைமை ரூ.19.99 கோடியும் வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி ரூ.22.25 கோடி செலவிட்டுள்ள நிலையில், அதில் ரூ.7 கோடி வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ரூ.1.38 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.2.17 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.77 கோடியும் கணக்கு காட்டியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தனது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை.