குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள திண்டோலி பகுதியில் அமைந்துள்ள சனியா-ஏக்லாரா சந்திப்புப் பகுதியில், பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவர் மீது தெருநாய் ஒன்று திடீரெனப் பாய்ந்து வெறித்தனமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த தெருநாய் அவரை நோக்கிப் பாய்ந்து கடுமையாகக் கடித்துக் குதறியது. இந்தத் தாக்குதலில் தப்பிக்க அவர் முயன்றாலும், அந்த நாய் விடாமல் விரட்டித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் முழுவதையும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
