“அவன் கூட பேசுறியா… கடிதத்தில் மர்மம்…?” வலுகட்டாயமாக வாயில் விஷம் ஊற்றி… மாணவியை அழைத்து சென்ற லெக்சரர்… தற்கொலை நாடகமாடிய வழக்கில் திடீர் திருப்பம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிகானி பகுதியைச் சேர்ந்தவர் தந்திரா அக்ஷிதாராணி (20). இவர் சுரங்கப் பொறியியல் படித்து வந்தார். இவர் நஸ்பூரில் உள்ள சிங்கரேணி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தபோது, அங்கு அவுட்சோர்ஸ் லெக்சரராகப் பணியாற்றிய ஜெட்டி நவீன் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அக்ஷிதாராணிக்குச் சிங்கரேணி சுரங்கத்தில் ஓவர்மேனாக பணியாற்றிய பொம்மகாந்தி ரவி குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த லெக்சரர் நவீன் குமார் அக்ஷிதாராணி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி மாணவி அக்ஷிதாராணி வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எஃப்சிஐ சந்திப்பு அருகே அவரைத் தனது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்ற நவீன் குமார், அவருக்குப் பலவந்தமாகப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்க வைத்துள்ளார். மேலும், ரவி குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பது போல ஒரு கடிதத்தையும் அந்தப் பெண்ணை எழுத வைத்துள்ளார். பின்னர் மாணவி மயக்கமடைந்ததும், நாடகமாடி குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.

   

ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் போன்றவை கைநிறையச் சிக்கின. விசாரணையில் நவீன் குமார் மாணவியை வலுக்கட்டாயமாக நஷம் குடிக்க வைத்துப் படுகொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து தற்கொலை வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலிஸார், கொடூர லெக்சரர் நவீன் குமார் மற்றும் ரவி குமார் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.