“லைவ் ஸ்ட்ரீமில் பயங்கரம்…!” முகத்தில் குத்து… பாட்டில் வீச்சு… பெண் ஸ்ட்ரீமரை சரமாரியாக தாக்கிய பிரபல கேமர்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2026

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற ‘SeeEx’ என்ற பிரபல கேமிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சியின் போது, பிரபல ஸ்ட்ரீமரான ட்ராகோ என்பவர் மீயா மேக்ஸ்டு என்ற பெண்ணை கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லைவ் ஸ்ட்ரீமிங் நடந்து கொண்டிருந்த போதே, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் மீயாவை, ட்ராகோ முகத்தில் குத்தியும், பால் பாட்டிலை அவர் மீது வீசியும், தரையில் தள்ளி வைத்து அத்துமீறியும் தாக்கியுள்ளார். சுற்றிலும் பலர் கண்டும் காணாமல் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

   

பிரபல கிளிஃபோர்ட் ஸ்ட்ரீமரான கிளவிக்குலரின் முன்னாள் காதலிதான் இந்த மீயா மேக்ஸ்டு என்றும், தனிப்பட்ட காரணங்களால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை சிலர் ‘தாக்குதல்’ எனக் கண்டித்து வரும் நிலையில், சிலர் இருவருக்கும் இடையே நடந்த முந்தைய மோதலின் தொடர்ச்சி எனப் பதிவிட்டு வருகின்றனர். இணையவாசிகளிடையே இந்த சம்பவம் பெரும் காரசார விவாதத்தைக் கிளப்பியுள்ளது.