போதையில் இருந்த பாட்னாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 60 வயது தாயை வீட்டிலேயே தீவைத்து கொளுத்திக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் காஜேகலான் பகுதியில் நடந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சின்டு குமார் என்பவரைப் போலிஸார் உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யச் சென்ற காவல் அதிகாரிகளையும் சின்டு குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னைத் ‘கடவுள்’ என்று கூறிக்கொண்டு அவர் மனநிலை சரியில்லாதவர் போல விசித்திரமாக நடந்துகொண்டதாகப் போலிஸார் தெரிவித்தனர்.
இறந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பாட்னாவில் உள்ள என்.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
